கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் எண்ணப்படியே எல்லாம் விஷயங்களும் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொல்வர். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிடிவாதத்தை விட்டு விடுவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். பணம் எவ்வளவு வந்தாலும் அதற்கேற்றாற் போல செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறும் யோகம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்றை தீர்க்க முடியும். உங்கள் எதிர்பாப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே வீண் விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்திற்காக நிறைய பாடுபட வேண்டியிருக்கும். நெருங்கிய உறவினர்களிடம் நல்லுறவு ஏற்படும். உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிப்படவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com